செயல்பாடுகளிலிருந்து வருவாய் 46.58 சதவீதம் அதிகரித்து ரூ.612.46 கோடியாக உயர்ந்துள்ளது. இது ஒரு வருடம் முன்பு இதே காலாண்டில் ரூ.417.82 கோடியாக இருந்தது.
2025ம் நிதியாண்டில் ஜூன் 30ம் தேதி உடன் முடிவடைந்த காலாண்டில் நிகர வட்டி வருமானம் (NII) ஆண்டுக்கு ஆண்டு 52 சதவீதம் அதிகரித்து ரூ.264.06 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில், நிறுவனம் ரூ.161.74 கோடியாக நிகர வட்டி வருமானம் இருந்தது.
ஜியோ நிதிக் காலாண்டு 1 முடிவுகள்:
2025-26ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் காலாண்டிற்கு 24% அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் அதன் லாபம் மார்ச் 2025 காலாண்டை விட 3 சதவீதம் அதிகமாகும்.
பங்கு விலை
வியாழக்கிழமை அன்று ஷேர்மார்க்கெட் முடிவடைந்த பிறகு காலாண்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் ஜியோ ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 1.5 சதவீதம் குறைந்து ரூ.318.1 ஆக முடிவடைந்தன. ஜியோ ஃபைனான்ஸ் சர்வீசஸ் பங்கு விலை பி எஸ் இ சந்தையில் ரூ.320 வர்த்தகம் தொடங்கியது.
JFSL, ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க் லிமிடெட்டில் (JPBL) ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் 14.96% பங்குகளை Q1 FY26 இல் தோராயமாக ரூ.105 கோடிக்கு வாங்கியது. இந்த கையகப்படுத்தல் JPBL ஐ JFSL இன் முழு உரிமையாளராக மாற்றியது. ஜூன் 30, 2025 நிலவரப்படி, இந்த பேமெண்ட்ஸ் வங்கி 2.58 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து ரூ.358 கோடி மதிப்புள்ள வைப்புத்தொகைகளை வைத்திருந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.